பாமக எம்எல்ஏ அருள் சென்ற கார் மீது அன்புமணி தரப்பினர் தாக்குதல்!
03:04 PM Nov 04, 2025 IST | Murugesan M
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பாமக எம்எல்ஏ அருள் மீது அன்புமணி தரப்பினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவும், பாமக நிறுவனர் ராமதாஸின் ஆதரவாளருமான அருள், வடுகநத்தம்பட்டியில் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டுக் காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
Advertisement
அப்போது அன்புமணியின் ஆதரவு மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷின் ஆதரவாளர்கள் சிலர், காரை மறித்து கண்ணாடியை உடைத்தனர்.
கற்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில் அருளுடன் சென்றவர்கள் லேசான காயமடைந்தனர்.
Advertisement
அப்போது எம்எல்ஏ அருளின் ஆதரவாளர்களும் பதில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
Advertisement