For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பாரத தேச வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் - இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு நயினார் வாழ்த்து!

07:13 AM Nov 03, 2025 IST | Ramamoorthy S
பாரத தேச வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய  நாள்   இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு நயினார் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணி 1983-ஆம் ஆண்டு ஆடவர் ஒருநாள் உலக கோப்பையை வென்று சாதனை நிகழ்த்தியதை போலவே, இன்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இமாலய சாதனையை நிகழ்த்தி இருப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், இன்றைய நாள், நம் பாரத தேச வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நாள்! மகளிர் கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்தி வந்த, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை ஓரம் கட்டி, நம்முடைய கொடியை பறக்க விட்டிருக்கிறார்கள் நம்முடைய இந்திய வீராங்கனைகள்!

Advertisement

ஆண்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்தி வந்த கிரிக்கெட் உலகில், இந்திய மகளிர் அணியின் இந்த வெற்றி, ஆயிரக்கணக்கான பெண்களின் கிரிக்கெட் கனவை நனவாக்கும்!

வெற்றி பெற்ற இந்திய அணி வீராங்கனைகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அத்தனை பேருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அணி மென்மேலும் பல வெற்றிகளை குவிக்க இறைவன் துணை நிற்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement