For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பாரா ஒலிம்பிக் "ஹீரோ" ஹெயின்ரிச் பாபோவ் - இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

06:05 AM Oct 08, 2025 IST | Murugesan M
பாரா ஒலிம்பிக்  ஹீரோ  ஹெயின்ரிச் பாபோவ்   இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை

கேன்சரில் இருந்து மீண்டெழுந்து இளம் வயதிலேயே பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற தங்கமகன் ஹெயின்ரிச் பாபோவ்-ன் வரலாற்றை அலசலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

ஹெயின்ரிச் பாபோவ்.... ஜெர்மனியை சேர்ந்த முன்னாள் பாரா தடகள வீரரான இவர், 2012-ம் ஆண்டில் லண்டனில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார். 2004-ம் ஆண்டில் ஏதென்ஸ் நகரில் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது.

Advertisement

அதில் முதல் முறையாகப் பங்கேற்ற ஹெயின்ரிச் பாபோவ், 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் நீளம் தாண்டுதலில் வெண்கலம் பதக்கம் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

2016-ம் ஆண்டில் ரியோ டி ஜெனீராவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விளையாடிய ஹெயின்ரிச் பாபோவ், நீளம் தாண்டுதலில் தங்கம் வென்று ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஒலிம்பிக் தொடரில் மட்டுமல்ல.

Advertisement

பல்வேறு சர்வதேச தடகள போட்டிகளிலும் 7 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என ஹெயின்ரிச் பாபோவின் பதக்க பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஜெர்மனியின் பதக்க நாயகனாக வலம் வந்த ஹெயின்ரிச் பாபோவ் இந்தப் புகழை அவ்வளவு எளிதாக அடைந்துவிடவில்லை. அவரது 9 வயதில் Ewing's sarcoma எனப்படும் எலுப்பு புற்றுநோய் தாக்கி விட, இடது காலை வெட்டி எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

இந்த செய்தி ஹெயின்ரிச் பாபோவின் பெற்றோருக்குப் பேரிடியாக இருந்தது. ஆனால், ஹெயின்ரிச் பாபோவ் துவண்டுவிடவில்லை. விதி இதுதான் என ஏற்றுக்கொண்டார். ஹெயின்ரிச் பாபோவிற்கு சிறுவயது முதலே, FOOTBALL என்றால் அலாதி பிரியம். இடது காலை இழந்த வருத்தத்தில், கால்பந்து விளையாட்டை வேடிக்கை மட்டும் பார்த்து வந்த ஹெயின்ரிச் பாபோவ் மனம்தளராது உழைத்து அணியின் கோல்கீப்பராக உருவெடுத்தார்.

அப்போது அவர் பாரா தடகள் போட்டிகள் குறித்தெல்லாம் அறிந்திருக்கவில்லை. 17 வயது இருக்கும்.... உள்ளூர் அளவிலான பாரா தடகள போட்டியில், பங்கேற்ற ஹெயின்ரிச் பாபோவிற்கு அழைப்பு விடுக்கப்பட, அதுவே அவரது வாழ்வில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இதுவே தனக்கான களம் என்பதை புரிந்துகொண்ட ஹெயின்ரிச் பாபோவ், தலைசிறந்த தடகள வீரராக உருவெடுக்க வேண்டும் எனச் சபதமேற்றார்.

அவருக்கு, சப்போர்ட் கிடைத்ததா? என்றால் இல்லை. நெருங்கிய நண்பர்களே அவரை ஏளனப்படுத்தினர். நடப்பதே பெரிய விஷயம், இதில் ஓட போகிறாயா? என கிண்டலடித்தனர். ஆனால், நினைத்ததை நடத்திக்காட்டும் குணம் படைத்த ஹெயின்ரிச் பாபோவ், தனது இலக்கை நோக்கிக் கடுமையாக உழைத்தார்.

இரவு பகல் பாராமல் பயற்சி எடுத்து, தன்னை இழிவு படுத்தியவர்களின் மூக்குடைத்தார் ஹெயின்ரிச் பாபோவ். எந்தவொரு சவாலையும் நெஞ்சை நிமிர்த்து எதிர்கொள்ளும் இரும்பு மனிதனான ஹெயின்ரிச் பாபோவ், ஒலிம்பிக் தொடரின் மூலம் தங்க மகனாக உருவெடுத்து இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக வாழ்த்து வருகிறார்.

Advertisement
Tags :
Advertisement