பிப். 17 முதல் 20 வரை தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர்!
03:30 PM Jan 29, 2025 IST | Murugesan M
சென்னையில் நடைபெற உள்ள தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர் மற்றும் டிரையத்லான் ஆசிய கோப்பை போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் பிப்ரவரி 17ம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறவுள்ளது.
Advertisement
இதில் நாடு முழுவதும் இருந்து 1,700 பாரா வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
மேலும் சென்னையில் பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெறும் டிரையத்லான் ஆசிய கோப்பை போட்டிகளில் இந்தியா, ஜப்பான், அயர்லாந்து உட்பட 15 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு துறையின் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் மேகநாதன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement