For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பிரதமர் மோடிக்கு டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டின் உயரிய விருது!

06:27 AM Jul 05, 2025 IST | Ramamoorthy S
பிரதமர் மோடிக்கு டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டின் உயரிய விருது

டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

அரசு முறை பயணமாக டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான "தி ஆர்டர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட் அண்ட் டொபாகோ" விருதை வழங்கி அதிபர் கிறிஸ்டின் கங்கலூ கௌரவித்துள்ளார்.

Advertisement

தனக்கு விருதை வழங்கியதற்காக நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, இது இரு நாட்டிற்கும் இடையிலான ஆழமான நட்பின் அடையாளம் என்று குறிப்பிட்டார்.

140 கோடி இந்தியர்களின் சார்பாக இந்த விருதை பெருமையாக ஏற்றுக்கொள்வதாக கூறிய மோடி, இருநாட்டு மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் என்று உறுதியளித்தார்.

Advertisement

டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டின் ஜனாதிபதி கங்கலுவின் மூதாதையர்கள் திருவள்ளுவரின் பூமியான தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் மோடி குறிப்பிட்டார்.

வலிமையான நாடுகளுக்கு துணிச்சலான ராணுவம், தேசபக்தி கொண்ட குடிமக்கள், வளங்கள், நட்பு நாடுகள் உள்ளிட்ட 6 விஷயங்கள் இருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறியிருப்பதை பிரதமர் மோடி சுட்டி காட்டினார்.

Advertisement
Tags :
Advertisement