பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம் : பிப்.24-ல் 19வது தவணை நிதி வெளியாகும் - தகவல்!
06:10 PM Feb 05, 2025 IST | Murugesan M
வரும் 24ஆம் தேதி பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 19வது தவணை நிதி வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அரசின் முக்கிய நலத்திட்டங்களில் PM-Kisan எனப்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா முக்கியமான ஒன்றாகும். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 18 தவணை நிதி வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஆண்டுதோறும் ஆறாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்குகிறது. இந்த சூழலில், வரும் 24-ம் தேதி 19வது தவணையை பிரதமர் மோடி வெளியிடுவார் என மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உறுதிப்படுத்தியுள்ளார்.
Advertisement
Advertisement