புகை பிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் அதிகரிப்பு!
06:23 PM Feb 04, 2025 IST | Murugesan M
காற்று மாசுபாட்டால் புகைப் பிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது குறித்து தி லான்செட் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அடினோ கார்சினோமா என்ற புற்று நோயானது, 2022 ஆம் ஆண்டில் உலகளவில் புகை பிடிக்காதவர்களிடையே அதிக அளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு காற்று மாசுபாடே காரணமென கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement