For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

புதிய டிஜிட்டல் புரட்சியாக உருவெடுத்து கவனம் ஈர்க்கும் VREELS செயலி!

08:10 PM Nov 03, 2025 IST | Murugesan M
புதிய டிஜிட்டல் புரட்சியாக உருவெடுத்து கவனம் ஈர்க்கும் vreels செயலி

சமூக ஊடகங்கள், பொழுதுபோக்கு மற்றும் வணிகத்தை ஒரே தளத்தில் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள VREELS செயலி, புதிய டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தி படைப்பாற்றல் மற்றும் அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்கும் தளமாக உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு.

பல்வேறு நவீனங்கள் புகுத்தப்படும் இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக ஊடகங்களையும், பொழுதுபோக்கையும் ஒரே தளத்தில் இணைக்கும் புதிய புரட்சியாக VREELS உருவெடுத்துள்ளது. பயனர்கள் தங்கள் சிந்தனைகள், கதைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்கிக்கொள்ளவும் இந்தத் தளம் உதவுகிறது.

Advertisement

அமெரிக்கா மற்றும் இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட இந்த VREELS பயன்பாடு, குறும் வீடியோக்கள், உரையாடல்கள், குரல் மற்றும் வீடியோ அழைப்புகள், புகைப்பட பகிர்வு மற்றும் ஆன்லைன் வணிகம் ஆகியவற்றை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கிறது.

இந்தச் செயலியில் உள்ளமைக்கப்பட்ட FILTER-கள், எழுத்து, ஸ்டிக்கர்கள் மற்றும் பின்னணி இசைகள் மூலம், பயனர்கள் தங்கள் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எளிதாக உருவாக்கிப் பகிர வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

அதேபோல, இதில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள PIX POUCHES எனப்படும் சிறப்பம்சம், புகைப்படங்கள், கருத்துக்கள் அல்லது துறைகள் சார்ந்த தொகுப்புகளை உருவாக்க உதவுகிறது. இதனால் பயனர்கள் தங்கள் நட்பு வட்டாரங்களுடன் இணைந்து புதிய சிந்தனைகளை உருவாக்க வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளும் இதனுள் அமைக்கப்பட்டுள்ளதால், பயனர்கள் செயலியை விட்டு வெளியேறாமல் தங்கள் தொடர்புகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழு உரையாடல்கள் மற்றும் COMMUNITY-க்கள் இந்தச் செயலியை படைப்பாற்றலுக்கான மேம்பட்ட அனுபவமாக மாற்றுகின்றன.

மேலும், இதிலுள்ள V MAP சேவை மூலம் பயனர்கள் தங்கள் இருப்பிடத்தை நண்பர்களுக்குப் பகிரவும், அவர்களின் இருப்பிடங்களைத் தெரிந்துகொள்ளவும் முடியும் எனவும், இது முழுக்க முழுக்கப் பயனர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, பிறந்தநாள், ஆண்டு விழா போன்ற சிறப்பு நாட்களைப் பயனர்கள் நினைவுகூரும் வகையில், REMINDER-களை உருவாக்கிக்கொள்ள V CAPSULES எனப்படும் புதிய அம்சம் உதவுகிறது. இந்தச் செயலியில் அதி விரைவில் அறிமுகமாகவுள்ள SHOP மற்றும் BID அம்சம் மூலம், பயனர்கள் நேரடியாகக் கொள்முதல், விற்பனை மற்றும் ஏலம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியுரிமை மற்றும் பாதுகாப்பு இந்தச் செயலியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தரவு பாதுகாப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் VREELS செயலியில், டோக்கன் அடிப்படையிலான அங்கீகாரம், தொடர்க் குறியாக்கம் மற்றும் தனிப்பயன் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் பயனர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படுகின்றன.

தற்போது 22 நாடுகளில் பீட்டா வடிவில் அதாவது சோதனை அடிப்படையில் இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதனை GOOGLE PLAY STORE மற்றும் APPLE APP STORE-களில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற சமூக ஊடகத் தளங்களைப்போல ஒற்றைப் பணியை மட்டுமே செய்யாமல், VREELS பல அனுபவங்களை ஒரே தளத்தில் வழங்குவதால் மக்கள் மத்தியிலும் இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தச் செயலி படைப்பாளிகள், INFLUENCER-கள் மற்றும் கதைச் சொல்பவர்களுக்கான முக்கிய தளமாக உருவாகியுள்ளது.

இந்தச் செயலியின் பல தொழில்நுட்ப காப்புரிமைகள் தற்போது பரிசீலனையில் உள்ளன. அவையனைத்தும் பயனர்கள் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் VREELS செயலி புதிய பரிமாணத்தை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கத் தொழில்நுட்பத்தையும், இந்திய சுயநிறைவையும் ஒருங்கிணைக்கும் இந்தத் தளம், MADE FOR THE WORLD என்ற எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.

Advertisement
Tags :
Advertisement