For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு திட்ட அறிக்கை தாக்கல்!

11:08 AM Mar 13, 2025 IST | Ramamoorthy S
பூந்தமல்லி   பரந்தூர் மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு திட்ட அறிக்கை தாக்கல்

பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் சமர்ப்பித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநரிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், பூந்​தமல்​லியில் இருந்து செம்​பரம்​பாக்​கம், தண்​டலம், இருங்காட்டுக்​கோட்​டை, ஸ்ரீபெரும்​புதூர், சுங்​கு​வார்​சத்​திரம் வழி​யாகச் சென்று பரந்​தூர் விமான நிலை​யம் வரையில் வழித்தடம் அமைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பூந்​தமல்லி மற்​றும் ஸ்ரீபெரும்​புதூர் இடையே​யான 5.9 கிலோ மீட்டர் தொலை​வுக்கு தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யத்​தால் முன்​மொழியப்​பட்ட உயர்த்​தப்​பட்ட வழித்தடத்​துடன் ஒருங்​கிணைக்​கப்​பட்​டுள்​ளதாகவும், இந்த வழித்​தடத்​தின் 52.94 கிலோ மீட்டர் தொலை​வுடன் 20 உயர்த்​தப்​பட்ட ரயில் நிலையங்​கள் இடம்​பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மொத்த செலவு 15 ஆயிரத்து 906 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு உள்ளது என்றும், பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையில் 8 ஆயிரத்து 779 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 14 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை 2028ஆம் ஆண்டுக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

====

Advertisement
Tags :
Advertisement