பூந்தமல்லி : பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது பாய்ந்த மின்சாரம்!
01:52 PM Jun 09, 2025 IST | Murugesan M
சென்னை பூந்தமல்லி பகுதி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டில் உள்ள பூங்காவில் சிறுவர்கள் பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, மின்கம்பம் அருகே விழுந்த பந்தை எடுக்க முயன்ற சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது.
Advertisement
அந்த சிறுவனை மீட்கச் சென்ற மற்றொரு சிறுவனின் மீதும் மின்சாரம் பாய்ந்ததால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து, 2 சிறுவர்களையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பாதுகாப்பற்ற முறையில் மின் வயர்கள் இருந்ததால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Advertisement
Advertisement