For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத திமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சியா? - நயினார் நாகேந்திரன் கேள்வி!

07:35 PM Oct 07, 2025 IST | Murugesan M
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத திமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சியா    நயினார் நாகேந்திரன் கேள்வி

" திமுககாரன்" எனும் ஒற்றை அடையாளமே பெண்களையும் சிறுமிகளையும் சிதைப்பதற்கு திராவிட மாடல் ஆட்சியில் வழங்கப்பட்ட தகுதியா? என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

Advertisement

இரும்புக்கரம் கொண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களை அடக்குவேன் என்று வீரவசனம் பேசிய முதல்வர் ஸ்டாலின், சென்னை கோயம்பேட்டில் 9 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளிச் சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக திமுக நிர்வாகி உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தியைப் படித்தீர்களா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்புணர்வு செய்த ஞானசேகரன், அரக்கோணம் கல்லூரி மாணவியைக் கட்டாயப்படுத்தி திருமணம் புரிந்து கொடுமை செய்த தெய்வச்செயல், தற்போது 15 வயது சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ரமேஷ் என பெண்கள் பாதுகாப்பை அச்சுறுத்தும் கயவர்கள் தொடர்ந்து திமுகவினராகவே இருப்பது ஏன்? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement

"திமுககாரன்" எனும் ஒற்றை அடையாளமே பெண்களையும் சிறுமிகளையும் சிதைப்பதற்கு திராவிட மாடல் ஆட்சியில் வழங்கப்பட்ட தகுதியா?, திமுகவின் மூத்த அமைச்சர்களே சிறிதும் நாகரிகமின்றி பெண்களைத் தரக்குறைவாக விமர்சித்து வசைபாடும் போது கழகக் கண்மணிகள் பெண்களின் பாதுகாப்பைக் களவாடுவதில் ஆச்சரியமில்லையோ? நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Out of control-இல் இயங்கும் திமுக உடன்பிறப்புகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்குத் திறனில்லாத இந்த ஆட்சிதான் பொற்கால ஆட்சியா? வெட்கக்கேடு என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Tags :
Advertisement