For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பியதைத் தட்டிக்கேட்டவர் கொலை - 3 பேர் கைது!

01:15 PM Apr 16, 2025 IST | Murugesan M
பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பியதைத் தட்டிக்கேட்டவர் கொலை   3 பேர் கைது

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே பெண்ணிற்கு மேசேஜ் அனுப்பியதைத் தட்டிக்கேட்டவரைக் கொலை செய்த வழக்கில், இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர் உட்பட 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

நெடுந்தாவு கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் தனது நண்பரின் கடையில் பணியாற்றும் பெண்ணிற்கு, மெசேஜ் அனுப்பி தொந்தரவு கொடுத்த ஜனா என்பவரைக் கண்டித்துத் தாக்கியுள்ளார்.

Advertisement

இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ஜனா உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் சரத் குமார் மற்றும் அவரது நண்பரை வழிமறித்து சரமாரியாக வெட்டியது.

இதில் படுகாயமடைந்த சரத் குமார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

Advertisement

இந்த கொலை வழக்கில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஜனா உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement
Tags :
Advertisement