For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பேட்டரியில் இயங்கும் புல்லட் : 72 வயதிலும் அசத்தல் - சாதனை படைத்த முதியவர்!

08:05 PM Jun 27, 2025 IST | Murugesan M
பேட்டரியில் இயங்கும் புல்லட்   72 வயதிலும் அசத்தல்   சாதனை படைத்த முதியவர்

டீசல் மற்றும் பெட்ரோல் மூலமாக மட்டுமே இயங்கும் ராயல் என்பீல்டு புல்லட் வாகனத்தைப் பேட்டரி மூலமாக இயங்கும் வகையில் தயாரித்துள்ளார்த் தென்காசியைச் சேர்ந்த 72 வயது முதியவர். பேட்டரியில் இயங்கும் புல்லட்டைத் தயாரித்தது எப்படி ? அதில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் உள்ளன ? என்பது குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

தென்காசி மாவட்டம் பாவூர்ச் சத்திரம் பகுதியைச் சேர்ந்த 72வயது குத்தாலிங்கத்திற்குச் சிறுவயதிலிருந்தே ராயல் என்பீல்டு புல்லட் மீது தீராத ஆர்வமும் பற்றும் இருந்துள்ளது.

Advertisement

தையல் தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் குத்தாலிங்கத்திற்கு ஆஸ்துமா பிரச்னை இருப்பது புல்லட்டை வாங்குவதற்கு ஒரு தடையாக இருந்திருக்கிறது.

பெட்ரோல் மற்றும் டீசலின் வாசனைத் தன் ஆஸ்துமா பிரச்னையைப் பெரிதாக்கும் என்பதால் அதனைத் தவிர்த்துவந்தாலும் புல்லட் வாகனத்தை ஓட்டியே ஆக வேண்டும் என்பதைத் தனது லட்சியமாகவே கொண்டிருந்தார்க் குத்தாலிங்கம்...

Advertisement

பெட்ரோல், டீசல் இல்லாமல் பேட்டரியின் மூலமாக இயங்கும் புல்லட் வாகனத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற குத்தாலிங்கத்தின் கடந்த 20 ஆண்டுகால முயற்சிக்குத் தற்போது பலன் கிடைத்துள்ளது.

பல்வேறு சோதனைகளுக்குப் பின் புல்லட் வாகனத்தைப் பேட்டரியின் மூல ம் இயக்கும் முயற்சியை வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காட்டியுள்ளார்.

பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் புல்லட்டுகளை விட பேட்டரியால் இயங்கும் புல்லட்டில் அதிகளவிலான மைலேஜ் கிடைப்பதாகவும் அவர்த் தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு புல்லட்டிலும் இல்லாத வசதியாக இந்தப் புல்லட்டில் பின்னோக்கி இயக்கும் வசதி, ஓடிக்கொண்டிருக்கும் போதே சார்ஜ் போடும் வசதி என அசத்தலான ஐடியாக்களைச் செயல்படுத்தி வெற்றிக் கண்டிருக்கும் குத்தாலிங்கம், அப்பகுதி மக்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

ஆசைக்கும் எண்ணத்திற்கும் வயது தடையல்ல என்பதை வெளிப்படுத்தும் வகையில் 72 வயதில் பேட்டரியில் இயங்கும் புல்லட்டைக் கண்டுபிடித்த குத்தாலிங்கம் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறார்.

Advertisement
Tags :
Advertisement