For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பேருந்து ஓட்டுநரை காலணியால் தாக்கிய போக்குவரத்து அதிகாரி சஸ்பெண்ட்!

12:54 PM Jun 09, 2025 IST | Murugesan M
பேருந்து ஓட்டுநரை காலணியால் தாக்கிய போக்குவரத்து அதிகாரி சஸ்பெண்ட்

ஆரப்பாளையத்தில் பணிச்சுமையால் உறங்கிய பேருந்து ஓட்டுநரைக் காலணியால் தாக்கிய போக்குவரத்து அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கணேசன் என்ற ஓட்டுநர் தாராபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரைக்குச் சிறப்புப் பேருந்தை இயக்கி சென்றுள்ளார்.

Advertisement

தொடர்ச்சியாகப் பேருந்தை இயக்கியதால் சோர்வடைந்த அவர்,  ஆரப்பாளையத்தில் முகப்பு விளக்கை அணைத்துவிட்டு ஓய்வெடுத்ததாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த பயணிகள் கண்காணிப்பாளர் அறையிலிருந்த அதிகாரியிடம் புகார் அளித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து ஓட்டுநர் கணேசனைத் தனது அறைக்கு அழைத்து விசாரணை நடத்திய மேலாளர் மாரிமுத்து,  அவரை காலணியால் தாக்கினார்.

Advertisement

பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவத்திற்குத் தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தாக்குதல் நடத்திய மேலாளர் மாரிமுத்துவை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
Tags :
Advertisement