போலந்து அதிபர் தேர்தலில் டிரம்பின் ஆதரவாளர் வெற்றி!
01:35 PM Jun 04, 2025 IST | Murugesan M
போலந்து அதிபர் தேர்தலில் கரோல் நவ்ரோக்கி 50.89 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
ஐரோப்பிய நாடான போலந்தின் அதிபராக உள்ள கன்சர்வேடிவ் கட்சியின் ஆண்ட்ரெஜ் டுடாவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 6ம் தேதியுடன் நிறைவடைகிறது.
Advertisement
இதையொட்டி நடைபெற்ற அதிபர் தேர்தலில் கரோல் நவ்ரோக்கி வெற்றி பெற்றுள்ளார். இவர் அண்டை நாடான உக்ரைனை நேட்டோவில் இணைவதை எதிர்ப்பதோடு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக இருக்கிறார்.
இவருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement