மகனின் ஆடம்பர வாழ்க்கையால் பதவி இழந்த மங்கோலிய பிரதமர்!
02:25 PM Jun 05, 2025 IST | Murugesan M
தனது மகனின் ஆடம்பர வாழ்க்கையின் காரணமாக மங்கோலிய பிரதமர் பதவியை இழந்துள்ளார்.
சமீபத்தில் மங்கோலிய பிரதமரின் மகன் தனது காதலியுடன் சுற்றித்திரிந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
Advertisement
அப்போது அவர் விலை உயர்ந்த பொருட்களுடன் வலம் வந்தது தெரியவந்தது. இது பெரும் விவாத பொருளான நிலையில் பிரதமர் பதவி விலகக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மங்கோலியப் பிரதமர் லவ்சன்னம்ஸ்ரைனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் அவர் போதிய பெரும்பான்மையை பெறாததால் பதவியை ராஜினாமா செய்தார்.
Advertisement
Advertisement