மகளிர் பிரீமியர் லீக் : மும்பை அணியின் அதிரடி பந்து வீச்சு, குஜராத் அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்!
12:12 PM Feb 19, 2025 IST | Murugesan M
மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், மும்பை அணியின் அதிரடி பந்து வீச்சால், குஜராத் அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
குஜராத் மாநிலம் வதோதராவில், மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
Advertisement
இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணியில் அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 32 ரன்களும், காஷ்வி கௌதம் 20 ரன்களும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.
இறுதியில் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மும்பை அணி தரப்பில் ஹேலி மேத்யூஸ் 3 விக்கெட்டும், அமெலியா கெர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Advertisement
Advertisement