மசூதிக்கு வெளியே பெண்ணை மரக்கட்டைகளால் தாக்கிய கும்பல்!
12:27 PM Apr 16, 2025 IST | Murugesan M
கர்நாடகாவில் மசூதிக்கு வெளியே இஸ்லாமிய பெண் ஒருவர் ஷரியத் சட்டப்படி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவின் தாவரேகெரேயில் இஸ்லாமிய பெண் ஒருவரை பார்க்க, அவரது உறவினர்கள் இருவர் வீட்டுக்குச் சென்றுள்ளனர். இதனால் அப்பெண்ணின் நடத்தையின் மீது சந்தேகமடைந்த கணவர் உள்ளூர் ஜமா மசூதியில் புகாரளித்துள்ளார்.
Advertisement
இதனையடுத்து சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஷரியத் சட்டப்படி தண்டனையளிக்க முடிவு செய்யப்பட்டது. மசூதிக்கு வெளியே அழைத்து வரப்பட்ட அப்பெண்ணை, 6 பேர் கொண்ட கும்பல் மரக்கட்டைகளைக் கொண்டு தாக்கியது.
இந்த தாக்குதலில் அந்த பெண் படுகாயமடைந்தார். கடந்த 9-ம் தேதி நடந்த இச்சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
Advertisement
Advertisement