மணப்பாறை அருகே வீட்டில் குழந்தையை கடத்தி செல்ல முயற்சித்த கும்பல் - சுற்றிவளைத்து பிடித்த பொதுமக்கள்!
10:55 AM Jun 11, 2025 IST | Ramamoorthy S
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடத்தி செல்ல முயற்சித்த கும்பலை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பாலப்பட்டியில் பெருமாள் - சுதா தம்பதியரின் ஒன்றரை வயது குழந்தையை ஒரு கும்பல் தூக்கி கொண்டு சென்றது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு பொதுமக்கள் விரட்டியதால், அந்த கும்பல் குழந்தையை விட்டுவிட்டு தப்பி சென்றது. விடாமல் துரத்தி சென்ற பொதுமக்கள் அவர்களை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Advertisement
Advertisement