மணல் கொள்ளை வழக்கு - ட்ரோன் மூலம் அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்a மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு!
10:52 AM Jul 06, 2025 IST | Ramamoorthy S
திருச்சியில் மணல் கொள்ளை நடைபெற்றதாக கூறப்படும் இடத்தில் ட்ரோன் மூலம் அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மாவடிகுளம் பகுதியில் கிராவல் மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் விதிகளை மீறி 500 லாரிகளில் மணல் அள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணல் கொள்ளையை தடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
Advertisement
அதனை விசாரித்த நீதிபதி, மணல் அள்ளப்பட்ட இடத்தில் அளவீடு செய்தும் மாவடிகுளம் பகுதியில் நிலத்தடி நீர் எந்தளவு உள்ளது என்பது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Advertisement
Advertisement