மண்டபம் மீனவர்களுக்கு பிப்ரவரி 17-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
07:22 AM Feb 04, 2025 IST | Sivasubramanian P
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்களுக்கு பிப்ரவரி 17-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 10 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். அப்போது அவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது.
Advertisement
தொடர்ந்து கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 10 பேரையும் வரும் 17-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
Advertisement
Advertisement