மதுரை : அரசு பேருந்து ஓட்டுநரை காலணியால் தாக்கிய உதவி மேலாளர் - மன்னிப்பு கோரி வீடியோ வெளியீடு!
02:22 PM Jun 10, 2025 IST | Murugesan M
மதுரையில் அரசு பேருந்து ஓட்டுநரைக் காலணியால் தாக்கிய போக்குவரத்துக் கழக உதவி மேலாளர் கையெடுத்துக் கும்பிட்டு மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டம், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர் செல்லும் அரசு பேருந்தை தாராபுரம் கிளை ஓட்டுநரான கணேசன் இயக்கியுள்ளார். பயணிகள் ஏறிய பின்னரும் பேருந்தை எடுக்கத் தாமதமானதால் அதுகுறித்து பயணிகள் ஓட்டுநர் கணேசனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Advertisement
அப்போது அவர் உதவி மேலாளர் கூறினால் மட்டுமே பேருந்தை எடுக்க முடியும் எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து பயணிகள் உதவி மேலாளர் மாரிமுத்துவை அணுகி முறையிட்டபோது, ஆத்திரமடைந்த மாரிமுத்து ஓட்டுநர் கணேசனை அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்று காலணியால் சரமாரியாகத் தாக்கினார்.
Advertisement
Advertisement