For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மதுரை : கிரில், தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு!

05:03 PM Feb 05, 2025 IST | Murugesan M
மதுரை   கிரில்  தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு வாந்தி  வயிற்றுப்போக்கு

மதுரை மாவட்டம், சோழவந்தானில் கிரில் மற்றும் தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சோழவந்தான் தென்கரை பாலம் அருகே பிரீட்டா எனும் உணவகம் இயங்கி வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல் வாடிக்கையாளர்கள் கிரில் மற்றும் தந்தூரி சிக்கன் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

Advertisement

அதில் 3 வயது குழந்தை உள்பட 22 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக சோழவந்தான் அரசு மருத்துவமனை மற்றும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட உணவகத்தில் உணவகத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், இச்சம்பவம் குறித்து சோழவந்தான் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement