For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மதுரை சித்திரை திருவிழா நிகழ்ச்சி நிரல் - முழு விவரம்!

01:33 PM Apr 14, 2025 IST | Ramamoorthy S
மதுரை சித்திரை திருவிழா நிகழ்ச்சி நிரல்   முழு விவரம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா குறித்த நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்ரல் 28-ஆம் தேதி முதல் மே 10-ஆம் தேதி வரை 13 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறுகிறது. அதன் முழு விவரம் வருமாறு

Advertisement

ஏப்ரல் 28, 2025 - திங்கட்கிழமை,
மாலை வாஸ்து சாந்தி.

ஏப்ரல் 29, 2025 - செவ்வாய்க்கிழமை
காலை 10.35 முதல் 10.59 மணிக்குள் சித்திரை திருவிழா கொடியேற்றம்.

Advertisement

இரவு 7 மணி முதல் 10.30 மணி வரை கற்பக விருட்சம், சிம்ம வாகனம்

ஏப்ரல் 30, 2025 - புதன்கிழமை,
காலை 7 முதல் 9.30 வரை - தங்க சப்பரம்.

இரவு 7 மணி முதல் 10.30 மணி வரை - பூத வாகனம், அன்ன வாகனம்.

மே 1, 2025 - வியாழக்கிழமை, காலை 7 முதல் 9.30 வரை - தங்க சப்பரம்.

இரவு 7 மணி முதல் 10.30 மணி வரை - கைலாச பர்வதம், காமதேனு வாகனம்.
மே 2, 2025 - வெள்ளிக்கிழமை, காலை 9 மணி - தங்க பல்லக்கு

இரவு மாலை 6 மணி முதல் 9.30 மணி வரை - தங்க பல்லக்கு

மே 3, 2025 - சனிக்கிழமை,
காலை 9 மணி - தங்க சப்பரம்

இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை - வேடர் பரி லீலை - தங்க குதிரை வாகனம்

மே 4, 2025 - ஞாயிற்றுக்கிழமை
காலை 7.30 முதல் 10.30 வரை - தங்க சப்பரம்

இரவு 7.30 மணி முதல் 11.00 மணி வரை - சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை - ரிஷப வாகனம்
(தங்க ரிஷபம், வெள்ளி ரிஷபம்)

மே 5, 2025 - திங்கட்கிழமை
காலை 8 முதல் 10.30 வரை - தங்க சப்பரம்

இரவு 7 மணி முதல் 10.30 மணி வரை - நந்தீகேஸ்வரர், யாழி வாகனம்

மே 6, 2025 - செவ்வாய்க்கிழமை
காலை 10 மணி - தங்க பல்லக்கு

மாலை: - ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் -
(பட்டாபிஷேக நேரம் : மாலை 07:35 to 07:59 மணிக்குள் பட்டாபிஷேகம்)

இரவு : 9 மணி முதல் 11 மணி வரை - வெள்ளி சிம்மாசனத்தில் சுவாமி அம்பாள் வீதியுலா.

மே 7, 2025 - புதன்கிழமை
காலை 7 முதல் 9.30 வரை - மரவர்ண சப்பரம்

மாலை / இரவு மாலை 6 மணி முதல் 11.30 மணி வரை - ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் - இந்திர விமான உலா

மே 8, 2025 - வியாழக்கிழமை
காலை 4 மணி - வெள்ளி சிம்ஹாசனம்
காலை : ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் (காலை : 8:35 to 8:59 மணிக்குள் திருக்கல்யாணம்)

இரவு 7.30 முதல் 11.30 வரை - தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனம், புஷ்ப பல்லக்கு

மே 9, 2025 - வெள்ளிக்கிழமை
திருத்தேர் தேரோட்டம்
திருத்தேர் எழுந்தருளல் நேரம்: காலை 5:30
திருத்தேர் வடம்பிடித்தல் நேரம் : காலை 6:30 மணிக்கு

இரவு: 7 மணி முதல் 10.30 மணி வரை - சப்தாவர்ண சாப்ரம்

மே 10, 2026 - சனிக்கிழமை
- தீர்த்தம்,

இரவு: 7 மணி முதல் 10 மணி வரை - வெள்ளி ரிஷப வாகனம்

Advertisement
Tags :
Advertisement