மதுரை வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
09:13 AM Jun 08, 2025 IST | Ramamoorthy S
பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.
மதுரை ஒத்தக்கடை வேலம்மாள் மைதானத்தில் பாஜக பொதுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டதிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கும் நிலையில், டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அவர் மதுரை வந்தடைந்தார்.
Advertisement
மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், மூத்த தலைவர்களான தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சிந்தாமணி பகுதியில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதிக்கு புறப்பட்டு சென்றார்.
Advertisement
Advertisement