மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் 90 டிகிரி ரயில்வே மேம்பாலம் மாற்றி அமைக்கப்படும் : அறிவிப்பு
03:18 PM Jun 20, 2025 IST | Murugesan M
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் சர்ச்சைக்குள்ளான 90 டிகிரி ரயில்வே மேம்பாலம் மாற்றி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போபாலில் 18 கோடி ரூபாய் செலவில் 648 மீட்டர் நீளம், 8 புள்ளி 5 மீட்டர் அகலத்தில், 90 டிகிரி வளைவுடன் கூடிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது.
Advertisement
இந்த பாலத்தால் விபத்துக்கள் அதிகம் ஏற்படும் எனக்கூறி எதிர்ப்பலைகள் கிளம்பிய நிலையில், இணையத்திலும் பலர் தங்கள் விமர்சனங்களைப் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் ரயில்வே மேம்பாலத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement