மத்தியப் பிரதேசம் : தலைக்கு ரூ.14 லட்சம் அறிவிக்கப்பட்ட சிறுமி சரணடைந்தார்!
மத்தியப் பிரதேசத்தில் மூளைச்சலவை செய்து மாவோயிஸ்ட் இயக்கத்துடன் செயல்பட்டு வந்த சிறுமி காவல்துறையிடம் சரணடைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரின் பிஜாபூர் பகுதியைச் சேர்ந்த சுனிதா, கடந்த 2022ம் ஆண்டு முதல் தடைச் செய்யப்பட்ட இயக்கத்தில் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார்.
இதனால் அவரது தலைக்கு சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசக் காவல்துறைகள் இணைந்து 14 லட்ச ரூபாய் அறிவித்திருந்தன.
இந்நிலையில், மத்தியப் பிரதேசக் காவல்துறையின் சிறப்பு நக்சல் எதிர்ப்புப் பிரிவின் உதவி தளபதி ரூபேந்திரா துர்வே முன்னிலையில் சுனிதா, தனது துப்பாக்கியுடன் சரணடைந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், உள்துறை அமைச்சர் அமித் ஷா நக்சல் இயக்கத்தினருக்கு விடுத்த கடுமையான எச்சரிக்கையின் நேர்மறையான விளைவே இந்தச் சரணடைவு என்று கூறினார்.