மயிலாடுதுறை அருகே அக்னி குண்டத்தில் தவறி விழுந்த பெண் - காப்பாற்றிய இளைஞர்!
07:25 AM Jun 09, 2025 IST | Ramamoorthy S
மயிலாடுதுறை அருகே நடைபெற்ற தீமிதி திருவிழாவில் அக்னி குண்டத்தில் தவறி விழுந்த பெண்ணை இளைஞர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார்.
திருவிழந்தூர் கவரத்தெருவில் உள்ள ஆதி மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. காப்பு கட்டிய பக்தர்கள் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். இந்நிலையில் பெண் ஒருவர் எதிர்பாராத விதமாக குண்டத்தில் தடுமாறி விழுந்தார்.
Advertisement
அப்போது அருகில் இருந்த இளைஞர் சாதுரியமாக செயல்பட்டு அப்பெண்ணை தீயில் விழாமல் காப்பாற்றினார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது...
Advertisement
Advertisement