மாட்ரிட் ஓபன் டென்னிஸ் : அடுத்த சுற்றுக்கு முன்னேறிய கோகோ காப்!
12:46 PM Apr 26, 2025 IST | Murugesan M
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கோகோ காப் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
Advertisement
இந்நிலையில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காப், உக்ரைனின் டயானா யஸ்ட்ரீம்ஸ்கா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 0-6 என இழந்த கோகோ காப், சுதாரித்துக் கொண்டு அடுத்த இரு செட்களை 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
Advertisement
Advertisement