'மாநாடு-2' எடுக்கப்பட உள்ளதாக தகவல்!
11:41 AM Jun 26, 2025 IST | Murugesan M
சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தின் 2ஆம் பாகம் எடுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான மாநாடு திரைப்படம் தொடர் தோல்வி படங்களால் துவண்டு இருந்த சிம்பிற்குத் திருப்பு முனையாக அமைந்தது.
Advertisement
இந்த படத்தில் சிம்புவுடன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ள படங்களில் நடித்து முடித்துவிட்டு இந்த படத்தில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement