மாமன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!
04:42 PM May 28, 2025 IST | Murugesan M
சூரி நடித்த மாமன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.
Advertisement
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுப்பூர்வமாகப் பேசும் படைப்பாக இப்படம் வெளியாகி உள்ளது. படம் வெளியாகி இதுவரை 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement