மியான்மருக்கு உதவும் SEVA INTERNATIONAL, HINDU FAMILY RELEIF GROUP!
மியான்மரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தினமும் உணவு வழங்கும் பணியை SEVA INTERNATIONAL மற்றும் HINDU FAMILY RELEIF GROUP ஆகிய அமைப்புகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
மியான்மரில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். மாண்டலே நகரில் பாதிக்கப்பட்ட 4 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் SEVA INTERNATIONAL அமைப்பினர் மாண்டலே நகருக்கு விரைந்தனர். தொடர்ந்து அங்கு 2 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 4 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு SEVA INTERNATIONAL அமைப்பினர் தினமும் உணவு வழங்கி வருகின்றனர்.
இப்பணியில் HINDU FAMILY RELEIF GROUP அமைப்பை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, மருந்து உள்ளிட்ட பொருட்களை இவ்விரு அமைப்பினரும் இணைந்து வழங்கி வருகின்றனர். மியான்மரில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன் இந்த பணியானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.