முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கு : தீர்ப்பு மே 7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
02:39 PM Apr 16, 2025 IST | Murugesan M
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிரான நில முறைகேடு வழக்கின் தீர்ப்பு மே 7-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நில முறைகேடு வழக்கில் மைசூர் லோக் ஆயுக்தா போலீசார் முதலமைச்சர் சித்தராமையா, மனைவி பார்வதி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Advertisement
இந்த வழக்கில் சித்தராமையாவுக்கு ஆதரவாக லோக் ஆயுக்தா போலீசார் தாக்கல் செய்த அறிக்கைக்குத் தடை விதிக்கும்படி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு நேற்று வழங்கப்படவிருந்தது. இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு வரும் மே 7-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், லோக் ஆயுக்தா போலீசார் முழு விசாரணை விவரத்தை சமர்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement