முதல்வர் ஸ்டாலின் தண்ணீர் திறக்க தகுதியற்றவர் : சேலம் மேற்கு மாவட்ட பாஜக தலைவர்!
02:50 PM Jun 11, 2025 IST | Murugesan M
சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்குத் தண்ணீர் திறக்க வருகை தரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய சேலம் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ஹரிராமன், தமிழகத்தில் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை உள்ளதாகத் தெரிவித்தார்.
Advertisement
மேலும், பெண்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய முதலமைச்சர் ஸ்டாலின் டெல்டா பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க தகுதியற்றவர் எனவும் கூறினார்.
Advertisement
Advertisement