முருகப் பெருமானின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து வழிபட அனுமதி கோரி வழக்கு : காவல்துறைக்கு நீதிபதி உத்தரவு!
12:51 PM Jun 10, 2025 IST | Murugesan M
மதுரையில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து வழிபட அனுமதி கோரிய வழக்கில் 12-ம் தேதிக்குள் முடிவெடுக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ள அம்மா திடலில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து வழிபட அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமெனத் தெரிவித்திருந்தார்.
Advertisement
இந்த வழக்கானது நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், அறுபடை மாதிரிகளை வைத்து வழிபட ஆகம விதிகள் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து, மனு மீது 12-ம் தேதிக்குள் உரிய முடிவெடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
Advertisement
Advertisement