For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

முருக பக்தர்கள் மாநாட்டில் கட்சி வேறுபாடின்றி அனைவரும் பங்கேற்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்

09:21 AM Jun 11, 2025 IST | Ramamoorthy S
முருக பக்தர்கள் மாநாட்டில் கட்சி வேறுபாடின்றி அனைவரும் பங்கேற்க வேண்டும்   நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டுக்கு வெளியே பாஜக முருகப் பெருமானுக்கு யாத்திரை எடுத்திருக்கிறதா?" என்று சிலர் கேட்பது ஆச்சரியமாக உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலகெங்கும் உள்ள பல கோடி மக்கள் முருகப்பெருமானை வழிபட்டு, கொண்டாடி வரும் வேளையில், தமிழகத்தில் முருக பக்தர்களைத் திரட்டி முருகனுக்கென விழா எடுக்க நமது தமிழக பாஜகவும் இந்து முன்னணியும் இணைந்து முன்னெடுத்து இருக்கின்றன என அவர் கூறியுள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டுக்கு வெளியே பாஜக முருகப் பெருமானுக்கு யாத்திரை எடுத்திருக்கிறதா?" என்று சிலர் கேட்பது ஆச்சரியமாக இருக்கிறது. குறிப்பிட்ட மதக்கடவுள்களை மட்டும் இழிவுபடுத்தும் சில கட்சிகளுக்கு மத்தியில், மாநில வித்தியாசமின்றி அனைத்து பகுதியிலும் அனைத்து கடவுள்களையும் போற்றி வருவது தான் பாஜகவின் வழக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனை நிருபிக்கும் விதமாக, வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மகாராஷ்டிராவில், அதுவும் மும்பை மாநகரில் நமது பாஜக சொந்தங்கள் சியோன் கோலிவாடா சட்டமன்ற உறுப்பினர் திரு. @கேப்டன் தமிழ்செல்வன்  தலைமையில், பெருந்திரளான பக்தர்களுடன் மிகச்சிறப்பாக வேல்யாத்திரை நடத்தி இருக்கிறார்கள் என அவர் கூறியுள்ளார்.

Advertisement

"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது நாம் அனைவரும் அறிந்த பழமொழி. எனவே, தமிழக பாஜக மீது தேவையற்ற அவதூறுகளை பரப்புவதை எதிர்க்கட்சிகள் தவிர்க்க வேண்டும்! மேலும் திருப்பரங்குன்றத்தில் முருக பக்தர்கள் சார்பாக நடைபெறும் மாநாட்டில், கட்சி வேறுபாடின்றி, காங்கிரஸ் தலைவரும், சட்டமன்றத்தில் எனதருகே அமர்ந்திருக்கும் என் அன்புக்குரிய நண்பருமான செல்வப்பெருந்தை உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் அழைப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
Advertisement