முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடைபெறும் : காடேஸ்வரா சுப்பிரமணியம்
முருக பக்தர்கள் மாநாடு இந்துக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கும், உரிமையைப் பெறுவதற்குமான மாநாடு என, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மதுரை மாவட்டம் வண்டியூரில் அவர் அளித்த பேட்டியில்,
முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடைபெறும் என்றும் முருக பக்தர்கள் மாநாடு என்பது இந்துக்களை ஒற்றுமைப்படுத்துவது, அவர்களுக்கான உரிமையைப் பெறுவதற்கானது என்று அவர் கூறினார்.
திருமாவளவன் மற்றும் திமுக தலைவர்கள் இந்துக்களைப் பற்றி இழிவாகப் பேசி வருகின்றனர் என்றும் திமுகவினர், தடுக்க தடுக்கத் தான் முருக பக்தர்கள் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெறும் என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.
முருக பக்தர்கள் மாநாடு நடக்கக்கூடாது என்பதற்காக, பொய் வழக்குகளைப் பதிவு செய்கின்றனர் என்று கூறியவர், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.