முருக பக்தர்கள் மாநாட்டிற்கு திமுகவினர் ரகசியமாக வருவார்கள் - தமிழிசை சௌந்தரராஜன்
09:27 AM Jun 08, 2025 IST | Ramamoorthy S
உள்துறை அமைச்சர் அமித்ஷா எத்தனை முறை தமிழகம் வருகிறார் என்று எண்ணுவதன் மூலம் திமுகவிற்கு பயம் வந்து விட்டதை உணர முடிவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் 2026ல் நடக்கும் சட்டமன்ற தேர்தல் மூலம் தமிழக மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என தெரிவித்தார்.
Advertisement
உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரைக்கு வருவது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளதாகவும், ஆனால் திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார. முருக பக்தர்கள் மாநாட்டிற்கு திமுகவினரே ரகசியமாக வருவார்கள் என்றும் தமிழிசை தெரிவித்தார்.
Advertisement
Advertisement