For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு  முட்டுக்கட்டை போடும் திமுக ஆட்சியை இந்து மக்கள் தூக்கி எறிவார்கள் - ஹெச்.ராஜா உறுதி!

09:00 AM Jun 11, 2025 IST | Ramamoorthy S
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு  முட்டுக்கட்டை போடும் திமுக ஆட்சியை இந்து மக்கள் தூக்கி எறிவார்கள்   ஹெச் ராஜா உறுதி

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு  திமுக முட்டுக்கட்டை போடுவதாகவும், இந்து மக்கள் இந்த ஆட்சியை தூக்கி எறிவார்கள் என்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர். அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அறிவித்ததில் இருந்து திமுகவிள் நிலையில் தடுமாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. கூட்டணி அறிவிக்கப்பட்ட 6 மணி நேரத்திற்குள் தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி இது சந்தர்ப்பவாத கூட்டணி என கூறினார்.

Advertisement

போதைப்பொருள் அதிக புழக்கம் உள்ளது தமிழ்நாட்டில் என அனைத்து சர்வேக்களும் சொல்கிறது. தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து குற்ற செயல்களுக்கும் போதைப் பொருட்கள் முக்கிய காரணமாக உள்ளதாக தெரிவித்தார்.

இதே மைதானத்தில் எத்தனை கூட்டங்கள் நடைபெற்றுள்ளது என்பதை நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளதாகவும், திமுக அரசு மீது நீதிமன்றங்கள் அடிககடி குட்டு வைப்பதாகவும் அவர் கூறினார்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement