மெட்ராஸ் மேட்னி வெற்றி தமிழ் திரையுலகிற்கு கிடைத்த வெற்றி!
12:42 PM Jun 13, 2025 IST | Murugesan M
மெட்ராஸ் மேட்னி படத்திற்குக் கிடைத்த வெற்றி தமிழ் திரையுலகிற்குக் கிடைத்த வெற்றி என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவான மெட்ராஸ் மேட்னி திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது.
Advertisement
ஒரு மிடில் கிளாஸ் மனிதனின் வாழ்க்கையில் சந்தோஷம் மற்றும் சுவாரஸ்யம் எங்கே இருக்கிறது, என்ற கேள்வியுடன் அனைவரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் எதிர்பாராத கதைக்களத்துடன் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், படத்தில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ் ரசிகர்களுக்கு வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement