For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

தேனிலவு சென்ற கணவரை கூலிப்படை ஏவி கொலை : கைதான மனைவியிடம் விசாரணை!

11:04 AM Jun 10, 2025 IST | Murugesan M
தேனிலவு சென்ற கணவரை கூலிப்படை ஏவி கொலை   கைதான மனைவியிடம் விசாரணை

மேகாலயாவுக்குத் தேனிலவு சென்றபோது கணவரைக் கூலிப்படை ஏவி கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் கைதான மனைவியை 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோனம் ஜோடிக்கு மே 11ஆம் தேதி திருமணம் நடந்த நிலையில், மே 20ஆம் தேதி மேகாலயாவுக்குத் தேனிலவு சென்றனர்.

Advertisement

அங்கு, இருவரும் மாயமானதாகக் கூறப்பட்ட நிலையில், ஜூன் 2ஆம் தேதி ராஜா ரகுவன்சியின் உடல் மட்டும் 200 அடி ஆழ பள்ளத்தாக்கில் மீட்கப்பட்டது.

மாயமான சோனத்தை போலீசார் தேடி வந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் காசிபூரில் உள்ள நந்த்கஞ்ச் காவல் நிலையத்தில் சோனம் சரணடைந்தார்.

Advertisement

அப்போது போலீசார் மேற்கொண்ட விசாரணையில், காதலனுடன் சேர்ந்து கணவரைக்
கூலிப்படை வைத்து கொலை செய்தது தெரியவந்தது. வழக்கில், மேலும் 3 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், 4 பேரும் மேகாலாயா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில், சோனத்தை 3 நாள் காவலில் எடுத்துள்ள மேகாலயா போலீசார், பீகாரின் பாட்னாவில் உள்ள புல்வாரி சரிஃப் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Tags :
Advertisement