For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் - கொட்டும் மழையில் பக்தர்கள் சாமி தரிசனம்!

01:23 PM Oct 22, 2025 IST | Murugesan M
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்   கொட்டும் மழையில் பக்தர்கள் சாமி தரிசனம்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள உலக பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

Advertisement

அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டன. உற்சவர் அங்காளம்மன் மங்கல கௌரி அலங்காரத்தில் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நாள் முழுவதும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், இரவு நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டு மழையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement

ஒரே நேரத்தில் அனைவரும் கையில் சூடம் ஏற்றி அம்மனை தரிசனம் செய்தது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.

Advertisement
Tags :
Advertisement