மே 31-ம் தேதி ரெட்ரோ ஓடிடி ரிலீஸ்!
12:21 PM May 27, 2025 IST | Murugesan M
சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் வரும் 31 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்தார். திரைப்படம் கடந்த மே 1 வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
Advertisement
சூர்யா நடித்த திரைப்படங்களிலேயே மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்த திரைப்படமாக ரெட்ரோ உருமாறியது. இதுவரை ரெட்ரோ படம் உலக அளவில் 235 கோடி ரூபாயை வசூலில் கடந்துள்ளது.
Advertisement
Advertisement