For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மொத்த பாகிஸ்தானும் க்ளோஸ் : 8000 கி.மீ பாயும் K-6 பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிக்கும் இந்தியா!

08:55 PM Jun 27, 2025 IST | Murugesan M
மொத்த பாகிஸ்தானும் க்ளோஸ்    8000 கி மீ பாயும் k 6 பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிக்கும் இந்தியா

மணிக்கு 9000 கிலோமீட்டர் வேகத்தில், 8000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா உருவாக்கி வருகிறது. பிரம்மோஸை விட அதிக சக்தி வாய்ந்த இந்த ஏவுகணையால் ஒரே நேரத்தில் முழு பாகிஸ்தானையும் ஒரே நேரத்தில் தாக்க முடியும் என்று கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த 10 ஆண்டுகளாக சுய சார்பு இந்தியா, தனது வான் பாதுகாப்பு அமைப்பு, பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் 5வது தலைமுறை ஸ்டெல்த் ரக அதிநவீன போர் விமானங்களை உள்நாட்டிலேயே உலகமே வியக்கும் வண்ணம் தயாரித்து வருகிறது.

Advertisement

இந்தியப் பெருங்கடல் பகுதியில் பெருகிவரும் சீனாவின் ஆதிக்கம், இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில், கடற்படையை மேம்படுத்த பிரத்யேக அதிநவீன ஆயுதங்களைத் தயாரிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. புதிய விமானம் தாங்கிக் கப்பல்கள், ரகசிய போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற பெரிய திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக, 9,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரங்களில் உள்ள இலக்குகளையும் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட JL-2 மற்றும் JL-3, ஏவுகணைகளைச் சுமக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியப் பெருங்கடலில் சீனா நிறுத்தியுள்ளது.

Advertisement

சீனாவை எதிர்கொள்ளும் வகையில் 2017ம் ஆண்டு, K-6 ஹைப்பர்சோனிக்  பாலிஸ்டிக் ஏவுகணையை    உருவாக்கும் பணியை DRDO தொடங்கியது. இந்தியாவின் ஏவுகணை நாயகனும் முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பெயரிடப்பட்ட K-தொடர் ஏவுகணை குடும்பத்தின் அதிநவீன ஏவுகணை இந்த K-6 ஆகும்.

ஏற்கெனவே, 2,000 கிலோமீட்டர் வரம்பு கொண்ட K-3, 3,500 கிலோமீட்டர் வரம்பு கொண்ட K-4, மேலும் 6,000 கிலோமீட்டர் வரம்பு கொண்ட K-5 ஏவுகணைகள் இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளன.

K-6 ஹைப்பர்சோனிக்  பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும்.  இந்த ஏவுகணை பிரம்மோஸ் குரூஸ் ஏவுகணையை விடவும் அதிக சக்தி வாய்ந்ததாகும். வழக்கமான வெடிமருந்துகள் மற்றும் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும்.

கடலுக்கு அடியில் மிக ஆழத்தில் இருக்கும் ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து, இந்த K-6 ஹைப்பர்சோனிக்  பாலிஸ்டிக் ஏவுகணையைக்  குறிப்பிட்ட இலக்கை நோக்கி ஏவ முடியும்.  இது  சுமார் 7.5 மேக் வேகம் உடையதாகும். அதாவது மணிக்கு 9,260 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப் பாய்ந்து தாக்கும் திறன் கொண்டதாகும்.

K-6 மூன்று-நிலை, திட-எரிபொருள் ஏவுகணையாகும். இந்த அதிநவீன ஏவுகணையின் சிறப்பு அம்சமே  Multiple Independently Targetable Re-entry Vehicle என்ற தொழில் நுட்பத்தைப்  பயன்படுத்துவதாகும். இது ஒரே நேரத்தில் பல போர்முனைகளைச் சுமந்து செல்ல உதவுகிறது.  மேலும் ஒவ்வொரு போர் முனையும் வெவ்வேறு இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கும் திறன் உடையதாகும்.

K-6 ஹைப்பர்சோனிக்  பாலிஸ்டிக் ஏவுகணை, S-5 வகை அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களுக்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. S-5 நீர்மூழ்கிக் கப்பல் சுமார் 12 மீட்டர் நீளமும் 2 மீட்டர் அகலமும் கொண்டதாகும். இது 3 டன் எடையுள்ள ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும்.

S-5 வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்கள், அரிஹந்த் நீர்மூழ்கிக் கப்பல்களை விடவும்  இரண்டு மடங்கு பெரியது. இது அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். 16 K-6 ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் வகையில் S-5 வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

2027 ஆம் ஆண்டுக்குள் தொடங்கும்  S-5 நீர்மூழ்கிக் கப்பல்களின் கட்டுமானம் விரைவில் முடிக்கப்பட்டு, 2030க்குள் கடற்படையில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதே ஆண்டில், K-6 ஏவுகணையும் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

உலகளாவிய ஹைப்பர்சோனிக் அமைப்புகளுடன் ஒப்பிடும்போது ஏவுகணையின் வேக நன்மை  குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் அவன்கார்ட் Mach 27 வேகம் கொண்டது.  சீனாவின் DF-41  Mach 25 வேகம் கொண்டது. அவையெல்லாம், நிலத்திலிருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் ஆகும். ஆனால்,  Mach 7.5 வேகமுடைய K-6 ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை உலகளவில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் வேகமான ஏவுகணைகளில் முதலிடத்தைப் பெறுகிறது.

வரும் ஜூலை ஒன்றாம் தேதி, (Kirov-III ) கிர்வாக்-III  ஸ்டெல்த் போர்க்கப்பலான (INS Tamala) ஐஎன்எஸ் தமால் என்ற சக்திவாய்ந்த போர்க்கப்பலை இந்தியா கடற்படையில் இணைக்க உள்ளது. மேலும் அரிஹந்த் வகை நீர்மூழ்கிக் கப்பல்களை அதிநவீன ஏவுகணை அமைப்புகளுடன் மேம்படுத்தும் பணியிலும் DRDO ஈடுபட்டுள்ளது.

வான் மற்றும் தரையில் தனது பாதுகாப்புத் திறனை மேம்படுத்தியுள்ள இந்தியா, கடலிலும் தனது வலிமையை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், K-6 ஹைப்பர்சோனிக்  பாலிஸ்டிக் ஏவுகணை இந்தியக் கடற்படைக்கு ஒரு வலிமையான சொத்து ஆகும்.

Advertisement
Tags :
Advertisement