மெட்ரோ பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரம் : தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த உயர்நீதிமன்றம்!
12:48 PM Apr 16, 2025 IST | Murugesan M
யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன கட்டடத்தைக் கையகப்படுத்துவது தொடர்பான அறிக்கையை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிலைய திட்டப் பணிகளுக்காக யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின், 837 சதுர மீட்டர் நிலத்தைக் கையகப்படுத்துவது தொடர்பாகச் சென்னை மெட்ரோ நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
Advertisement
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மெட்ரோ நிர்வாகத்தின் நோட்டீஸை ரத்து செய்து தனி நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் சென்னை மெட்ரோ நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement