ரஷ்யா : பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் பயணிகள் 7 பேர் உயிரிழப்பு!
02:10 PM Jun 02, 2025 IST | Murugesan M
ரஷ்யாவின் மேற்கு பிரையன்ஸ்க் பகுதியில் பாலம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
மாஸ்கோவிலிருந்து கிளிமோவ் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில், வைகோனிச்ஸ்கி என்ற இடத்தில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில், ஓட்டுநர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
Advertisement
மேலும், 30 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
Advertisement
Advertisement