ராஜமௌலி படத்தில் நடிக்க நானா படேகர் மறுப்பு!
01:24 PM May 31, 2025 IST | Murugesan M
ராஜமௌலி இயக்கி வரும் 'எஸ்.எஸ்.எம்.பி 29' படத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
1000 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில், மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
Advertisement
இதற்கிடையே, இப்படத்தில் மகேஷ்பாபுவின் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகரை படக்குழு அணுகி இருக்கிறது.
கதையை கேட்ட படேகர், தனது கதாபாத்திரம் மிகவும் சிறியதாகவும், முக்கியத்துவம் இல்லாமல் இருப்பதாகவும் கூறி வாய்ப்பை மறுத்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Advertisement
Advertisement