ராஜஸ்தான் : சுற்றுலா சென்ற இளைஞர்கள் 8 பேர் ஆற்றில் மூழ்கி பலி!
05:44 PM Jun 10, 2025 IST | Murugesan M
ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜெய்ப்பூரில் 11 பேர் சுற்றுலாவுக்கு வந்திருந்த நிலையில் டோங்க் மாவட்டத்தில் உள்ள பனாஸ் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
Advertisement
அப்போது சிலர் நீரில் மூழ்கிய நிலையில் அவர்களைக் காப்பாற்றச் சென்ற மற்றவர்களும் நீரில் மூழ்கி உள்ளனர்.
இதில் 8 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
சுற்றுலா வந்த இளைஞர்கள் 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement