ராமேஸ்வரம் ராம நாதசுவாமி கோயிலில் பாரம்பரிய தரிசன வழி மூடல் - பக்தர்கள் கடும் எதிர்ப்பு!
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் தரிசன கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் வழியை அறநிலையத்துறை மூடியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. 200 ரூபாய் தரிசன கட்டணம் செலுத்தினால் மட்டுமே இனி அந்த வழியை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இதற்கு பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இது உள்ளூர் மக்களின் பாரம்பரிய வழிபாட்டு உரிமைகளை பறிக்கும் செயல் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், உள்ளூர் மக்களை பெரும் துயரில் ஆழ்த்தும் இந்த கட்டண உயர்வு நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அறநிலையத்துறைக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.