ரிங்கு சிங்கிற்கு அரசுப்பணி வழங்க உள்ளதாக தகவல்!
01:34 PM Jun 28, 2025 IST | Murugesan M
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு அரசுப்பணி வழங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ரிங்கு சிங் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர். இந்திய அணியின் சிறந்த பினிஷராகச் செயல்பட்டு வருகிறார்.
Advertisement
இந்நிலையில் இவர் விளையாட்டு துறையில் நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பைக் கவுரவிக்கும் விதமாக, ரிங்கு சிங்குக்கு உத்தரப்பிரதேச அரசின் மாவட்ட அடிப்படைக் கல்வி அதிகாரி பதவி வழங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
விளையாட்டு துறையில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களை அங்கீகரிக்கும் உத்தரபிரதேச அரசின் திட்டத்தில் அவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement